மலாய்க்காரர்கள் சோம்பல் மற்றும் நேர்மை அற்றவர்கள் என்று முத்திரை பதிக்காதீர்

Tun Dr. Mahathir

Tun Dr. Mahathir

மரியாதைக்குரிய முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமது அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் மலாய்க்காரர்கள் சோம்பல் உற்றவர்கள் என்றும் நேர்மையற்றவர்கள் என்றும்  முத்திரை பதித்துள்ளார்.

ஒரு சில தரப்பினர்களின் இயலாமைகளையும் குறைகளையும் வைத்து ஒட்டு மொத்த மலாய்க்கார சமூகத்தையே இப்படி மிகவும் இழிவான முறையில் தவறாக  முத்திரை இடுவதும்  பொதுவாக குற்றம் சாட்டுவதும் ஏற்கத்தகாதத செயலாகும் .

எனக்கும் தனிப்பட்ட முறையில் பல மலாய்க்கார நண்பர்களும் வர்த்தக துணைமையர்களையும்  நன்கு தெரியும் . அவர்களின் நடப்பும் ,உறவும் மிகவும் நேர்மையானது. அது மற்றும் இன்றி வர்த்தக உறவுகளில் அவர்களின் உரிய நெறி முறைகளும் நடைமுறைகளும் பாரட்டதக்கதாகும் . ஒரு சில மலாய்க்காரர்களின் சோம்பல் தனத்தையும் , நேர்மையின்மையையும் காரணம் காட்டி ஒட்டு மொத்த மலாய்க்கார சகோதர சகோதரிகளையும் பொதுமைப்படுத்தி , இழிவாகவும் , அசட்டையாகவும் அறிக்கை விட்டிருக்கும் துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களின் செயல் ஏற்றுக்கொள்ளதகாதது,  என்று மஜிலிஸ் ககாசன் மலேசியாவின் தலைவர் திரு.மணிவண்ணன் ரத்தினம் அவர்கள் தெரிவித்தார்

அப்படியே தாங்கள் சொல்லுவது போல் சில கும்பல்கள் உள்ளார்கள் என்றால் ,அதுவும் தாங்களின் 22வருட மலேசிய பிரதமராக இருந்த கால கட்டத்தில் உருவாக்கிய அரசாங்க அமலாக்க திட்டத்தின் தோல்வியால் உருவாகிய சூழ்நிலையே என்று நீங்களே பகிரங்கமாக ஒப்பும்கொண்டிருக்கிறீர்கள், என மணிவண்ணன் கூறினார் .ஆதலால் ஒட்டுமொத்த மலாய்க்கார சமூகத்தினரை மூர்க்கத்தனமாக பொதுமைபடுத்தும் இழிவான கருத்துக்களை தயவுசெய்து தவிர்த்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார் .

அவர் கூறிய சோம்பல்தனமும் நேர்மையின்மையும் எல்லா சமுதாயத்திலும் சில கும்பல்கள்களால் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தவிர்க்க முடியாத இந்த செயல்பாட்டை யாரும் மறுக்கவும்  மறைக்கவும் முடியாது.ஆகையால் இத்தகையான ஏற்க்கதகாத முத்திரையை ஒட்டுமொத்த மலாய்க்கார சமூகத்தினர் மேல் எரிவது கண்டிக்கதக்கது.மரியாதைக்குரிய முன்னாள் பிரதமர் ,அவரின்   ஞாயமற்ற கருத்தை வாபஸ் வாங்கும் படி திரு.மணிவண்ணன் கூறினார் .

இருப்பினும், மரியாதைக்குரிய துன் டாக்டர் மகாதிர்அவர்களின் பல ஆண்டுகள் ஆட்சியின் கீழ் நம் நாடு மிகுந்த நன்மையையும் அடைந்து சுபீட்சமும் , செழிப்பும்,  இலாப கரமான முன்னேற்றம் பெற்று ,உலக நாடுகளிடையே மதிப்பு மிக்க அந்தஸ்தும் அங்கிகாரமும் விரைவான வளர்ச்சியையும் பெற்று தந்தார். இது என்றுமே ஒரு தவிர்க்க முடியாத உண்மையாகும் .

அப்படி இருக்கையில் அவர் விடுத்திருக்கும் இந்தகையான இழிவான அறிக்கை முறைக்கேடு செய்யும் வகையில் உள்ளது என்று மஇகா தேசிய தகவல் பிரிவின் உதவி தலைவரும் ஆன திரு.மணிவண்ணன் அவர்கள் மேலும் கூறினார் .

 

முற்றும்